Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே சூடானுர் ஊராட்சியில் 57.12இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகளுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சூடானுர் ஊராட்சியில் உள்ள காடுசெட்டிப்பட்டி, கூலிகானுர், சூடானுர் ஆகிய கிராமங்களில் நிழற்கூடம் அமைத்தல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, அங்கன்வாடி மைய கட்டிடம், கழிவு நீர் கால்வாய் அமைத்தல், சிமென்ட்டு சாலை அமைத்தல், தனிநபர் வீடுகளுக்கு குடிநீர் குழாய் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு கனிமவள நிதி மற்றும் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து  முன்னாள் அதிமுக அமைச்சர், கே.பி.அன்பழகன் எம்எல்ஏ அவர்கள்   57.12லட்சம்  ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து  திட்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்து துவக்கி வைத்து பேசியவர் தொகுதியில் உள்ள  கடைகோடி கிராமங்களும் அனைத்து அடிப்படை வசதிகளும் மக்களை சென்றடைய பாடுபடுவதாக கூறினார்.


இந்நிகழ்ச்சியில் முன்னாள் அரசு வழக்கறிஞர் செந்தில்,  ஒன்றிய குழு உறுப்பினர் பாஞ்சாலை கோபால், கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் நாகராசன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன், சர்க்கரை ஆலை இயக்குநர் மாதன் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies