Type Here to Get Search Results !

கூத்தாண்டஅள்ளியில் மகள் மாயம், தந்தை போலீசில் புகார்.


தர்மபுரி மாவட்டம்  பஞ்சப்பள்ளியை அடுத்த கூத்தாண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகன் இவரது மகள் சினேகா (வயது.18) இவர் இராயக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.


நேற்றிரவு வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்க்கு வந்தவர் இரவு உணவு முடித்து குடும்பத்துடன் தூங்க சென்றனர். விடியற்காலை கண் விழித்த முருகன் மகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார், உறவினர், நண்பர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் மகள் கிடைக்காததால் மகளை கண்டுபிடித்து தருமாறு பஞ்சப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


இதுகுறித்து பஞ்சப்பள்ளி போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்து மாயமான சினேகாவை தேடி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies