அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பழனி துரை உடற்கல்வி ஆசிரியருக்கு தேசத்தின் விடிவெள்ளி விருது / சேவை நாயகர் விருது, நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது, இவர் சமூக சேவையிலும் பொது சேவையிலும், கல்வி சேவையிலும் தொடர்ந்து 25 ஆண்டுகள் பணியாற்றி வருவது பாராட்டி இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இந்த விருது பசுமைவாசல் பவுண்டேஷன் திண்டுகல், அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்றம் திருவண்ணாமலை, சக்சஸ் அகாடமி பவுண்டேசன் ஆத்தூர் மற்றும் சேலம் சார்பாக விருது வழங்கப்பட்டது விருது பெற்ற உடற்கல்வி ஆசிரியர் பழனி துரையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் /மாவட்ட கல்வி அலுவலர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் பொதுமக்கள் ஆசிரியர் பெருமக்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
