Type Here to Get Search Results !

தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.


தருமபுரி மாவட்டம், தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப. அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

தருமபுரி மாவட்டம், தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப, அவர்கள் இன்று (27.04.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள், தருமபுரி மாவட்டம், தருமபுரி ஊராட்சி ஒன்றியம். செம்மாண்டகுப்பம் ஊராட்சி, பெரிய புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.19.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டு வரும் பணியினையும், நரிக்குறவர் தெருவில் பூதாளப்பன் கோவில் அருகில் ரூ.14.97 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளைக் கிணறு, 1500லிட்டர் தரைமட்ட நீர்தேக்கதொட்டி மற்றும் பைப்லைன் அமைத்தல், குக்கிராமங்களில் புதிய தெருவிளக்கு அமைத்தல், 4 மின்கம்பம் அமைத்தல், கவ்வெர்ட் அமைத்தல் உள்ளிட்ட பணிகளையும், கோணங்கிநாயக்கனஅள்ளி ஊராட்சி, மாரவாடியில் ரூ.17.43 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பல்நோக்கு மைய கட்டடம் கட்டப்பட்டு வரும் பணியினையும், செட்டிக்கரை ஊராட்சி அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் ரூ.11.791 இலட்சம் மதிப்பீட்டில் கோபர்தன் (GOBAR DHAN) அமைக்கப்பட்டு வரும் பணி என ரூ.63.69 இலட்சம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப, அவர்கள் தேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இப்பணிகளை தரமாகவும், விரைந்து முடித்திட வேண்டுமெனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.



மேலும், நரிக்குறவர் தெருவில் உள்ள நரிக்குறவர் மக்களிடம் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து, உடனடியாக நிறைவேற்றி தர வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள். இந்த ஆய்வின்போது, தருமபுரி வருவாய் வட்டாட்சியர் திரு.ஜெயசெல்வம், தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு. கணேசன், திருமதி.சத்யா உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies