Type Here to Get Search Results !

பாமகவின் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி ஒன்றிய தலைவர் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்.


தருமபுரி மேற்கு மாவட்ட பென்னாகரம் சட்டமன்ற தொகுதி ஒன்றிய தலைவர் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் வன்னியர் 10.5% இட ஒதுக்கீடு வேண்டி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் நீதியரசர் அவர்களுக்கும் கடிதம் எழுத வேண்டியது பற்றி கூறப்பட்டது. 

இந்த கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் கெளரவ தலைவரும் மற்றும் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஜி.கே.மணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் பங்கேற்றார் மேலும் இக்கூட்டத்தில் மாநில பொதுக் குழு உறுப்பினர் இராமகிருஷ்ணன், மாவட்ட தலைவர் செல்வகுமார், மாவட்ட இளைஞர் சங்க தலைவர் சத்தியமூர்த்தி, பென்னாகரம் தொகுதி அமைப்பாளர் சுதாகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் C.V.மாது, ஒன்றிய கவுன்சிலர் அருள்மொழி, முனியப்பன் தமிழாசிரியர் அவர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் ஒன்றிய தலைவர்கள், நகர தலைவர் சந்தோஷ் மற்றும் நகர செயலாளர் ஜீவா ஆகியோர் பாட்டாளி மக்கள் கட்சியினை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டார்.    

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies