
அப்போது, முன்னாள் எம்.பி., செந்தில், நிருபர்களிடம் கூறியதாவது: ஒரு நல்ல அரசு என்பது மக்களின் தேவையை அறிந்து செய்ய வேண்டும். ஆனால், வன்னியர்களுக்கான, 10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு பல முறை தி.மு.க., அரசிடம் கோரிக்கை விடுத்தும் அதை நிறைவேற்றாமல், செவிடான அரசாக உள்ளது. தி.மு.க., அரசு சமூகநீதிக்கான அரசு, இது பெரியார் மண் என தி.மு.க., கூறுவது பொய். ஒரு சமூகத்துக்கான இட ஒதுக்கீடு வழங்க முடியாத இந்த அரசு எப்படி சமூக நீதிக்கான அரசாக இருக்க முடியும். பெரியார் மண் என்று எப்படி சொல்லாம். தி.மு.க., அரசு வன்னியர்களுக்கான, 10.5 சதவீத ஒதுக்கீட்டை விரைந்து பெற்று தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, எம்.ஜி.ஆர்., நகர் குடியிருப்பு சங்க நிர்வாகி குமரன், தர்மபுரி பா.ம.க., நகர செயலாளர்கள் வெங்கடேஷன், சத்தியமூர்த்தி, இளைஞர் அணி செயலாளர் குமரன், ஜெய்கணேஷ் உட்பட பலர் உடன் இருந்தனர்.
.gif)

