தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே தட்டாரப்பட்டியில் விவசாயிகளிடம் தாவரங்களுக்கு மனிக்கட்டு நோய் மேலாண்மை செயல்முறை விளக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஓசூர் அதியமான் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன தாவர நோயியல் துறை பேராசிரியர் டாக்டர் ராஜசேகர் தலைமையில் அந்த கல்லூரி மாணவிகள் பிரேமா, பிரியதர்ஷினி, நித்தியா, மகிமா, இலக்கியா, சுவேதா, திவ்யா, ஜனனி, வித்யா, சங்கீதா ஆகியோர் பென்னாகரம் பகுதியில் முகமிட்டு பயிரிடப்பட்டுள்ள விவசாயங்கள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் தாவரங்களுக்கு மனிக்கட்டு நோய் மேலாண்மை பற்றி செயல்முறை விளக்கம் செய்து அங்குள்ள விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர்.
மனிக்கட்டு நோய் என்பது ரோஜா செடியில் அக்ரோபாக்டீரியம் டூமிபேசியன்ஸ் என்னும் பாக்டீரியா மூலம் வருகிறது இதனால் தாவரம் வளர்ச்சி குன்றி ரோஜா பூக்கள் விகிதம் குறைந்து பூவின் மகசூல் பாதிக்கப்படும். இதனால் விவசாயிகள் விவசாயத்தில் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் இந்த நோய் முழுமையாக குணப்படுத்த இயலாத நிலையில் இதற்கான சிறந்த தீர்வு வருமுன் காக்கும் முறையே ஸ்ட்ரிப் டு மைசின் சல்பேட் ஒரு கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து ரோஜா செடியை பதியம் போடும் முன் அந்த வேதிப்பொருள் கலந்த தண்ணீரில் ஊறவவைத்து நடுதல் இந்த நோய் தாக்கத்தை குறைக்கும் என்று செயல்முறை விளக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் தட்டாரப்பட்டியில் உள்ள பல விவசாயிகள் பங்கேற்றனர்.
.gif)

