இதில் மேல்தெரு, பனங்காடு, காவாப்பட்டி, சித்திரப்பட்டி, கல்கூடஅள்ளி, தளவாய்அள்ளிபுதூர் உள்ளிட்ட 12 கிராமங்களை சேர்ந்த காளைகள் அழைத்து வரப்பட்டு திரெளபதியம்மன் கோவில் முன்பு காளைகள் வரிசையாக நிற்க வைத்து 12 ஊர் கவுண்டர்களின் முன்னிலையில் கோ பூஜை செய்து காளைகள் மீது புனித நீர் தெளிக்கப்பட்ட பின்பு எருதாட்ட நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் 500க்கும் மேற்பட்டோர் எருதுகளுடன் கோவிலை வலம் வந்து எருதாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பனங்காடு இளைஞர் நற்பணி செய்திருந்தனர். பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 2 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எருதாட்ட விழாவினை கண்டுகளித்தனர்.
இந்நிகழ்சிக்கு பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்னர்.
- பாலக்கோடு செய்தியாளர் வேலு.
.gif)


