இக்கூட்டத்திற்கு நிறுவனர் மற்றும் மாநில தலைவர் தங்கவேலு தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் சிவக்குமார் வரவேற்புரையாற்ற, மாநில துணைத்தலைவர் சின்னசாமி சிறப்புரையாற்றினார். இறுதியில் தர்மபுரி மாவட்ட செயலாளர் எஸ் வி சாரதி நன்றியுரை ஆற்றினார். இச்செயற்குழு கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகளான பி.முனியப்பன், அண்ணாதுரை, எ.ராமர் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இச்செயற்குழு கூட்டத்தில், மாநில அளவில் வழங்கப்படும் கலைமாமணி விருதை தகுதி வாய்ந்த நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு மாவட்ட அளவில் 3 பேருக்கு வழங்கப்பட வேண்டும், நலிந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய தொகை 3 ஆயிரத்தை 5 ஆயிரமாக உயர்த்த வேண்டும், மாவட்ட அளவில் கலை பண்பாட்டு துறையின் சார்பில் வழங்கப்படும் விருதுகள் எண்ணிக்கை ஒரு ஆண்டுக்கு ஐந்திலிருந்து இருபத்தைந்தாக வழங்கப்பட வேண்டும்.
அரசு நிகழ்வுகளை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் வழங்காமல் அனைத்து தகுதி வாய்ந்த கலை குழுக்களுக்கு வழங்கப்பட வேண்டும், அனைத்து கலைஞர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட வேண்டும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களை பயன்படுத்தும் திட்டங்களில் ஊதியத்தை உயர்த்தி வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.
.gif)

