Type Here to Get Search Results !

கடகத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் புதிய மாணவியர் விடுதி; முதலமைச்சர் காணொளி மூலம் திறந்து வைத்தார்.


தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ், தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் ரூபாய் 3.20 கோடி செலவில் புதியதாக அனைத்து நவீன வசதிகளுடன் 100 பயிற்சியாளர்கள் தங்கும் 25 அறைகள் கட்டப்பட்டுள்ளது.  உணவு வசதியுடன் கூடிய இந்த மாணவியர் விடுதியை முதலமைச்சர்  தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி மூலம் திறந்து வைத்தார். 


இந்த விழாவில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.  தர்மபுரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், தர்மபுரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, மாவட்ட வார்டு உறுப்பினர் சத்யா சேட்டு,  கடகத்தூர் பஞ்சாயத்து தலைவர் ஐவண்ணன், தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சிவக்குமார், தொழிற்பயிற்சி அனைத்து அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies