சாமிசெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 2.00 இலட்சம் மதிப்பீட்டில் மாணவ, மாணவிகளின் நலன் கருதி ஸ்மார்ட் போர்டு வழங்கி தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் அவர்கள் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, ஊராட்சி மன்ற நிதியில் இருந்து சாமிசெட்டிப்பட்டி அருந்ததியர் காலனிக்கு ரூபாய் 6.40 இலட்சம் மதிப்பீட்டில் பொது கழிப்பறை அமைத்தல், கமலநத்தம் கிராமத்தில் ரூபாய் 8.00 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைத்தல், பங்குநத்தம் கொட்டாய் அரசு துவக்கப்பள்ளிக்கு ரூபாய் 5.00 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளி சுற்றுச்சுவர் அமைத்தல், சொரங்கப்பன்புதூர் கிராமத்தில் ரூபாய் 6.00 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைத்தல் ஆகிய பணிகளுக்கு பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
உடன், பாமக மாநில செயற்குழு உறுப்பினர் பெ.பெரியசாமி, ஊராட்சி மன்ற தலைவர் கந்தம்மாள்சேட்டு, ஒன்றிய குழு உறுப்பினர் மாதையன், ஊராட்சி துணை தலைவர் சுதாமாயகண்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணன், மற்றும் பெருமாள், ஆசிரியர்கள், ஊர்பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
.gif)

