Type Here to Get Search Results !

காவல் அதிகாரிகளின் கட்டளைக்கு கீழ்ப்படிந்ததற்கு எனக்கு இரண்டு தண்டனையா? காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் பரபரப்பு பேட்டி.

தர்மபுரி வெண்ணாம்பட்டி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ரத்தினகுமார் (வயது 49). இவர் தற்போது விருத்தாசலம் ரயில்வே காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தர்மபுரி நகர காவல் ஆய்வாளராக 2012 இல் பணிபுரிந்த  பின்பு, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அப்போது ஒரு கொலை வழக்கில் ராஜா முகமது, மனோகரன் உள்ளிட்ட 6 பேர் மீது   வழக்கு பதிந்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தார். ஆனால்  அந்த வழக்கு பொய் வழக்கு என நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதனால் பாதிக்கப்பட்ட இருவரும் மதுரை உயர் நீதிமன்றத்தில் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராஜா முகமது என்பவருக்கு ரூபாய் 10லட்சமும், மனோகரன் என்பவருக்கு ரூபாய் 8 லட்சமும் ரத்தினகுமார் கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்துள்ளது.

இதுகுறித்து காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் அவர்களிடம் கேட்டபோது, நான் 2013-ல் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தேன். அப்போது பாஜகவை சேர்ந்த முன்னாள் நகர செயலாளரும், நகர மன்ற உறுப்பினருமான தேங்காய் கடை முருகன் என்பவர்  குண்டு வீசி, வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து  தேங்காய் கடை முருகனின் தம்பி சிவக்குமார் என்பவர், தனது அண்ணனுக்கும் ராஜா முகமது என்பவருக்கும் நில தொடர்பாக பிரச்சனை இருந்ததாகவும், அதனால் தனது அண்ணன் கொலைக்கு காரணம் ராஜா முகமது,  மனோகரன் மற்றும் அடையாளம் தெரியாத 4 பேர் மீது புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஆறு பேர் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் ராஜா முகமது மற்றும் மனோகரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். 


இந்த இருவரின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்த  ரபீக் ராஜா மற்றும் சாகுல் அமீது ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தேன். இந்த கொலையை நேரில் பார்த்த சாத்தையா (வயது 60) என்பவர் என்னிடம் நேரடி சாட்சியம் அளித்ததோடு, நீதிமன்றத்திலும் ரகசிய வாக்குமூலம் கொடுத்துள்ளார். அடையாள அணிவகுப்பில் சிவகுமார் மற்றும் சாத்தையா இருவரும் கொலையாளிகளை அடையாளம் காட்டினர். இந்த வழக்கில் ஒரு குறிப்பிட்ட அமைப்பு சம்பந்தப்பட்டிருப்பதாக எனக்கு ஏற்பட்ட  சந்தேகத்தின் பேரில் கேரளா சென்று விசாரிக்க அனுமதி வேண்டினேன். ஆனால் உயர் அதிகாரிகள் அனுமதிக்காமல், கைது செய்த 4 பேரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய நிர்பந்தத்தினர். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய எந்த ஒரு காவல் ஆய்வாளருக்கும் அதிகாரம் இல்லை. மாவட்ட ஆட்சியர் முதல் கிராம நிர்வாக அலுவலர் வரை முழுவதுமாக அவர்களைப் பற்றி விசாரித்து, அவர்கள் கொடுக்கும் தகவலின்  அடிப்படையில் மட்டுமே தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்ய முடியும். இப்படி அன்றைக்கு இருந்த உயர் அதிகாரிகளின் அறிக்கையின் அடிப்படையிலும், நிர்பந்தத்தின்  அடிப்படையிலும் மட்டுமே  வழக்கை பதிவு செய்து  4 பேரை கைது செய்தேன்.  இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டதாக அன்றைக்கு எனக்கு பாராட்டும் கிடைத்தது. 


ஆனால் இன்று தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய என்னை நிர்பந்தித்த அனைத்து அதிகாரிகளும் ஒதுங்கிக் கொள்ள, உயிர் அதிகாரிகளின் அழுத்தத்தால் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்த எனக்கு பணி உயர்வு, ஊதிய உயர்வில் பாதிப்பு ஏற்பட்டதோடு மட்டும் அல்லாமல் அபராதமாக இருவருக்கும் சேர்த்து  ரூபாய் 18 லட்சம் வழங்க வேண்டும் என இரு இரண்டு தண்டனைகள் கிடைத்துள்ளது. இந்த அபராத தொகை குறித்து மதுரை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளேன். நியாயமான முறையில் பணியாற்றும் காவலர்களின் நிலைமை பெரும்பாலும் இவ்வாறே உள்ளது. இது போன்று இன்னும் இருக்கும் ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்ட 6 வழக்கின் உண்மை தன்மை விசாரித்து எனக்கு நீதி வழங்க வேண்டும் என்றும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது தற்போது மத்திய அரசால் தடை செய்யப்பட்ட ஒரு குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் தான் என எனது வழக்கு நாட்குறிப்பில் அன்றே நான் பதிவு செய்துள்ளேன் என்றும் கூறினார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies