தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், ஊராட்சிகள் துறையின் சார்பில் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு நிர்வாக வழிகாட்டுதல்கள், தெளிவுரைகள் மற்றும் மத்திய மாநில திட்டங்கள் குறித்த கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், ஊராட்சிகள் துறையின் சார்பில் மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளின் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு நிர்வாக வழிகாட்டுதல்கள், தெளிவுரைகள் மற்றும் மத்திய மாநில திட்டங்கள் குறித்த கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இன்று (28.12.2022) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு நிர்வாக வழிகாட்டுதல்கள், தெளிவுரைகள் மற்றும் மத்திய மாநில திட்டங்கள் குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி நிர்வாகம், கிராம சபை கூட்டம், நெகிழி மேலாண்மை, திறந்தவெளி மலம் கழித்தலற்ற ஊராட்சி, தெருவிளக்கு பாரமரிப்பு, ஊராட்சி சாலைகள், ஆக்கிரமிப்பு அகற்றுதல், குடிநீர் விநியோகம், ஊராட்சி மன்ற கூட்டங்கள் நடத்துதல், பொது கிணறுகள் மற்றும் குளங்கள் பாதுகாத்தல், ஊராட்சியின் சொந்த வருவாய், மத்திய மாநில திட்டங்கள், பள்ளிகள் பராமரிப்பு மற்றும் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், ஊராட்சி மன்ற தலைவர்களின் கருத்துகளும் கேட்டு அறியப்பட்டு விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திருமதி.வெ.தீபனாவிஸ்வேஸ்வரி இஆப., உதவி இயக்குநர் ஊராட்சிகள் திருமதி.அ.மாலா உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.