இந்த நிலையில் ஓசூரை சேர்ந்த QUESS கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற நிறுவனம் தர்மபுரி பிகேபி கிராண்ட் ஹோட்டல் அரிஞ்ஜய ஹாலில் தங்களது வேலைவாய்ப்பு முகாமை நடத்தினார்கள்.
இந்த நிறுவனத்தின் உதவி தலைவர் கிரிஜா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், மண்டல மேலாளர் குணசேகரன், மனித வள நிர்வாகிகள் சுகேஷ், நாகாச்சாரி, பிரபு மற்றும் ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு ஓசூரில் இயங்கி வரும் பிரபல மின்னணு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு ஆட்களை தேர்வு செய்தனர்.
இந்த முகாமில் சுமார் 1100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இதில் போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற 350 க்கும் மேற்பட்ட பெண்களை தேர்வு செய்ததோடு, சுமார் 500 பேரை காத்திருப்பு பட்டியலில் வைத்தனர்.
இந்த வேலை வாய்ப்பு முகாமை பற்றி நிர்வாகிகள் கூறும்போது, தங்களது நிறுவனம் மூலம் இந்தியாவில் இருக்கும் பல முன்னணி நிறுவனங்களுக்கு ஆட்களை குறிப்பாக பெண்களை தேர்வு செய்து பணியமர்த்தி வருகிறோம். இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம் வரும் நாட்களிலும் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது என்று தெரிவித்தனர்.
- தருமபுரி செய்தியாளர் மோகன்தாஸ்.
.gif)

