பின்னர் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். நன்றாக படித்து நல்ல நிலைக்கு மாணவர்கள் வர வேண்டும், ஒவ்வொருவரும் ஒரு இலட்சியத்தோடு கல்வி பயில வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அதனை தொடர்ந்து பள்ளியை ஆய்வு செய்தார். இடிந்த நிலையிலுள்ள பள்ளியின் சுற்றுச்சுவற்றிற்கு புதிய சுற்றுச்சுவர் அமைத்தல், நவீன கழிவறைகள் வசதி, கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், வகுப்பறைகளில் தண்ணீர் செட்டுகின்ற நிலையை போக்க மேற்கூரைகளை பழுதுப்பார்த்தல் போன்றவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மெற்கொள்ள மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டுமெனவும், பள்ளியை தூய்மையாக பராமரிக்கவும் தலைமை ஆசிரியரிடம் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தமிழ்செல்வி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கருணாநிதி, பள்ளியின் அரசு விடுதி தேர்வு குழு இ.மா.பாலகிருஷ்ணன், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் மாதேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் - அ.சிலம்பரசன், பழனிஅறிவு, ஊராட்சி மன்ற உறுப்பினர் இளங்கோவன், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் – சங்கர், செந்தில், திருமூர்த்தி, மனோகரன், விஜி, ராஜா, அசோக்குமார், கனல்சிவா மற்றும் ஊர்பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
.gif)

