தர்மபுரி மாவட்டம் ஜெர்தலாவ் ஊராட்சி மன்றம் சார்பில் திம்மம்பட்டி கிராமத்தில் மகளிருக்கென தனியாக பொது சுகாதார கழிவறை கட்ட 9 இலட்சம் ரூபாய் மதீப்பீட்டில் திட்டம் தொடங்கப்பட்டு பணிகள் நடந்து வந்த நிலையில் கட்டிட பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மகளிர் பொது சுகாதார கழிப்பிடம் நேற்று ஊராட்சி மன்ற தலைவர் முத்துமணி ஆனந்தன் தலைமயில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளி நாதன், ரவி, துணைத் தலைவர் செல்வம், துனை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் சஞ்சீவன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பாலக்கோடு ஒன்றியத்தில் முதல் முறையாக மகளிர் பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டது குறிப்பிடதக்கது.
.gif)

