நாட்டு நலப்பணித்திட்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பென்னாகரம் மற்றும் பென்னாகரம் வட்ட சட்டப்பணிக்குழு இணைந்து நடத்திய சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் - விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று 29-11-2022 கல்லூரி கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிற்கு முனைவர்.J. பாக்கியமணி, முதல்வர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்கள்.

தொடர்ந்து நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ந.அசோக்குமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார், சிவக்குமார், PLV, வட்ட சட்டப் பணிக்குழு, பென்னாகரம், லட்சுமி நாராயணன், BA.BL., தேவேந்திரன் BA.BL., நவநீதா BA.,BL., ஜெயந்தி B.Sc., BL, இளந்தென்றல் சரவணன், பட்டதாரி ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பென்னாகரம் மற்றும் M.K.மகேந்திரன் நேசம் தொண்டு நிறுவனம், மாங்கரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் POSCO சட்டம் பற்றிய தகவல்களை எடுத்துரைத்து மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
விழாவின் இறுதியில் முனைவர் கோ. வெங்கடாசலம், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் நன்றி உரையாற்றினார்.
