மேலும், தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் இரகசியமாக பாதுகாக்கப்படும். மேலும், காப்புக்காட்டிலிருந்து வன விலங்குகள் வெளியேறி கிராம பகுதிக்குள் நுழைதல், மனித-விலங்கு மோதல்கள், வன விலங்குகளால் பயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்படுதல், பட்டா நிலத்திலுள்ள கிணற்றில் வன விலங்குகள் வழி தவறி விழுதல் போன்ற வனத்துறை தொடர்பான அனைத்து தகவல்களையும் இத்தொலைபேசி எண்ணிற்கு தெரிவிப்பதன் மூலம் பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், தற்போது தீபாவளி பண்டிகையையொட்டிய விடுமுறை நாட்களில் வனப்பகுதிக்குள் சட்டத்திற்கு புறம்பாக வேட்டையாடுதல் போன்ற குற்றங்கள் அதிகம் நடைபெற வாய்ப்புள்ளதால், அவற்றை தவிர்க்கும் பொருட்டும், அவ்வாறான குற்றங்கள் ஏதேனும் நடைபெறுவது தெரியவந்தால் அதைப்பற்றி 24x7 கட்டணமில்லா தொலைபேசி சேவை 1800 4254 586 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் அதன் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது, என தருமபுரி வனக்கோட்டம், மாவட்ட வன அலுவலர் கே.வி.அப்பால நாயுடு தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
