உயர்மட்டக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி மாநில கல்விக்கொள்கை சார்பான பல்வேறு காரணிகள் குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் மண்டல அளவில் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சேலம் மண்டலத்தில் உள்ள சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கிடையே மாநில கல்விக்கொள்கை கருத்து கேட்புக்கூட்டம் வருகின்ற 28.10.2022 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர்கள் மாநில கல்விக்கொள்கை தொடர்பான தங்களது எழுத்து பூர்வமான கருத்துக்களை 26.10.2022 மாலை 05.00 மணிக்குள் தங்கள் முகவரி மற்றும் கைப்பேசி எண் விவரத்துடன் தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது, என மாவட்ட ஆட்சியர் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
