ஆப்பிரிக்க கெளுத்தி என்பவை மனிதர்களுக்கு மட்டுமல்லாது மற்ற நீர்வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்தை விளைவிக்க கூடிய மீன்கள், தன்னுடன் வாழும் மற்ற வகை மீன்களை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும் திறன் கொண்டவை.
தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்ப்பது சட்டப்படி குற்றம், ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை யாரும் வளர்க்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.
மாவட்ட கலெக்டரின் உத்தரவை மீறி சிலர் சட்டவிரோதமாக மீன் பண்ணைகளில் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்த்து ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
இதனை சாப்பிடுவதால் வயிற்று உபாதைகள், உடல்அரிப்பு, சொரியாசிஸ் போன்ற நோய்கள் வருவதாக தெரிவிக்கின்றனர். அதிகாரிகளின் கண்ணில் மண்னை தூவிவிட்டு இது போன்ற செயல்களில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து நம்மிடம் தெரிவித்த காரிமங்கலம் தாசில்தார் சுகுமார் காவல்துறை, வருவாய்த்துறை, மீன்வளத்துறை அதிகாரிகள் தலைமையில் இதற்கென்று தனி குழுவை மாவட்ட கலெக்டர் சாந்தி அமைத்துள்ளதாகவும் எனவே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு தடை செய்யப்பட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை முழுமையாக அழிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
