தருமபுரி பழைய கோட்டர்ஸ் சித்தேஸ்வரா நகரில் மை தருமபுரி அமைப்பு மற்றும் சித்தேஸ்வரா பாய்ஸ் குழு இணைந்து நான்காம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இரண்டாம் நாள் சிறப்பாக குமாரசாமிபேட்டை திருவாசகம் முற்றொருதல் குழுவினர் சார்பாக திருவாசகம் பாடப்பட்டது.
சிவனடியார்கள் இந்துமதி மற்றும் சாந்தி அவர்களின் தலைமையில் அவர்களது குழுவினர் திருவாசகம் பாடினர். இதில் தொழிலதிபர் KM.ரமேஷ், மை தருமபுரி அமைப்பின் நிர்வாகிகள், சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டார்.
