அரூர் அருகே கோழிப்பண்ணையில் திடிர் தீ விபத்து - 5 லட்சம் மதிப்புள்ள பொருள் எரிந்து சேதம்.
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த தாமரைகோழியம்பட்டி கிராமத்தில் விஸ்வநாதன், என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு மின் கசிவின் காரணமாக தீ பற்றியது. இதைக் கண்ட உரிமையாளர் விஸ்வநாதன், என்பவர் அரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் இரண்டு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதில், 1900கோழி குஞ்சுகள், 11மூட்டை தீவனம், தீவன பாக்ஸ், படதா, மருந்துகள், மற்றும் இதர உபகரண பொருட்கள் என 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது.
