மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் தருமபுரி மாவட்டத்தில் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறி வரும் சூழலுக்கு ஏற்பவும், நவீன சலவையகங்கள் அமைத்திட மேற்கண்ட இன மக்களில் தையல் தொழில் தெரிந்த 10 நபர்களை கொண்ட குழு அத்து ரூபாய் 3 இலட்சம் நிதி வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் பின்வருமாறு:
- குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும் ( விண்ணப்பிக்கும் நாளில்)
- குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (Ministry of Micro, Small and Medium Enterprises) துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- 10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும்.
- குழு உறுப்பினர்கள் பிவ, மிபிவ மற்றும் சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
- குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
விருப்பமும், தகுதியும் உடைய மேற்கண்ட இனத்தைச் சார்ந்த குழுவினர் உடன் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் முதல் தளத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து நிதி உதவி பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.