மேற்படி ரெக்ரூட்மென்ட் ரேலியில் Army Act 1950-இன்படி தேர்வு செய்யப்பட்ட Agniveers பணிக்காலம் நான்கு வருடங்கள் மட்டும் (including Training Period) என்பதால் ஓய்வூதியம், பணிக்கொடை, கேண்டீன் கார்டு, மருத்துவ காப்பீட்டு வசதி வழங்கப்பட மாட்டாது.
மேற்குறிப்பிட்ட பணியிடங்களில் ஏதேனும் ஒரு பணியிடத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் போரில் உயிர்நீத்த/ஊனமுற்ற படைவீரர்களின் குழந்தைகள், படைப்பணியின் போது உயிர்நீத்த மற்றும் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை உண்டு. மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய இணையதள முகவரி: www.joinindianarmy.nic.in தொடர்பு கொள்ளவும்.
எனவே தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள் ஆர்மி ரெக்ரூட் ரேலியில் (Agniveer) கலந்து கொண்டு பயன்பெறுமாறும், விபரம் ஏதேனும் தேவைப்படின் தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.


