தர்மபுரி மாவட்டம், அரூரில் உள்ள அரசு மருத்துவமனையில் 07/08/2022 அன்று இரவு மக்கள் நீதி மய்யம் தர்மபுரி கிழக்கு மாவட்டம் சார்பாக ஆய்வு செய்யப்பட்டது. மருத்துவமனையில் கொரோனா சமயத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்காமல் நிலுவையில் உள்ளது. எனவே துரித நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் நீதி மய்யம் தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. G. M. அரூர் ஸ்ரீனிவாசன் மருத்துவமனை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தார்.