Type Here to Get Search Results !

நேரு யுவகேந்திரா சார்பில் இளைஞர் மன்ற நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம்.

தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் இன்று மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய அளவிலான இளைஞர் மன்ற வளர்ச்சி முகாமின் நிறைவு விழா மற்றும் இளைஞர் மன்ற நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமணி தலைமையில் நடைபெற்றது.

மொரப்பூர் ஊராட்சி தலைவர் உமாராணி உலகநாதன் முன்னிலை வகித்தார். மொரப்பூர் விப்ரோ தொண்டு நிறுவன இயக்குநர் வெங்கடேசன் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினர். 

பாரத தேசத்தின் 75 வது சுதந்திர தினத்தினை சிறப்பாக கொண்டாடும் நோக்கில் வீடுகள் தோறும் வரும் 13ந்தேதி முதல் 15 முடிய மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைக்க விழிப்புணர்வு வழங்கப்பட்டது. முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார்.

100க்கும் மேலான இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக மொரப்பூர் தேசிய இளைஞர் தொண்டர் ஞானராஜ் நன்றி கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies