Type Here to Get Search Results !

மின் நுகர்வோரை மது போதையில் தாக்கிய மின் வாரிய அதிகாரி.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி தீர்த்தகிரி நகரை சேர்ந்த பெண்மனி ஒருவர் இன்று மாலை பாலக்கோடு மின்வாரிய அலுவலகத்திற்க்கு வந்து தன்னுடைய வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நீண்ட நேரமாக மின்சாரம் வரவில்லை என புகார் அளித்தார்.

அப்போது பணி உதவி மின்பொறியாளர் இல்லாததால் பணியில் இருந்த வணிகவிற்பனையாளர் குப்புராஜ் சரி செய்து தருவதாக பெண்மணியிடம் கூறிவிட்டு அலுவலகம் உள்ளே சென்று அமர்ந்தார். அப்போது பெண்மணியின் உடன் வந்தவர்கள் குப்புராஜை தகாத வார்த்தைகளால் பேசினர்.

இதனால் ஆத்திரமடைந்த குப்புராஜ் மின் மீட்டரை அவர்கள் மீது கோபத்துடன் வீசினார். இதனை செல்போனில் படம் பிடித்தவர்கள் சமூக வலைதளங்களில் பரவ விட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது இது குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்தனர், விசாரணையில் குப்புராஜ் பணியின் போது மது போதையில் இருந்தது தெரியவந்தது, அவரை பணியிடை நீக்கம் செய்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies