Type Here to Get Search Results !

பகுதி நேர தூய்மைப்பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு.

தருமபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் விடுதிகளில் காலியாக உள்ள 4 பகுதி நேர தூய்மைப்பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக 12.05.2022 மற்றும் 13.05.2022 அன்று வெளியிடப்பட்ட பத்திரிக்கை செய்தி மற்றும் 11.07.2022 அன்று நடைபெற இருந்த நேர்காணல் ஆகியவை பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தின் அறிவுரையின் படியும் 4 பகுதி நேர தூய்மைப் பணியாளர் பணியிடங்கள் 2 பணியிடங்களாக குறைக்கப்பட்டுள்ளதாலும் நிர்வாக காரணங்களுக்காகவும் இரத்து செய்யப்படுகிறது. 

மேலும் 2 பகுதி நேர தூய்மைப்பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் தருமபுரி மாவட்டம்.

மேற்கண்ட பகுதி நேர தூய்மைப்பணியாளர் (ஆண்) காலிப்பணியிடங்கள் நேர்காணல் மூலம், இனச்சுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்காக பின்வரும் தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  1. தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  2. வயது வரம்பு: 01.07.2022 தேதியில் BC/MBC & DNC 18 முதல் 34, வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

மேற்படி தகுதிகளுடன் தருமபுரி மாவட்டத்திலுள்ள விடுதிகளில் பகுதி நேர தூய்மைப்பணியாளர் (தொகுப்பூதியம்) பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள், உரிய விண்ணப்படிவத்தில் பூர்த்தி செய்து உரிய சான்றுகளின் நகல் இணைத்து சமீபத்தில் எடுக்கப்பட்ட பா போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி அதனை தருமபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 25.07.2022 தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

மேலும், காலதாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முகவரி தவறாக இருந்து, அழைப்பாணை திரும்ப பெறப்படும் விண்ணப்பங்கள் ஆகியவற்றின் மீது அரசு பரிசீலிக்காது எனவும், மனுதாரரே முழுப்பொறுப்பு எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மனுதாரர்களை மேற்கண்ட தகுதியின் அடிப்படையில் விண்ணப்பம் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், பகுதி நேர தூய்மைப்பணியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பப்படிவம் மற்றும் கூடுதல் விபரங்களுக்கு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கூடுதல் கட்டிடத்தில் மேல் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு https://dharmapuri.nic.in என்ற இணைய தளம் மற்றும் 04342-231861 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884