பெரும்பாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேளாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 9 ஜூலை, 2022

பெரும்பாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேளாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

பென்னாகரம் - தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை  அடுத்த  பெரும்பாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள்  படித்து வருகின்றனர். இந்த நிலையில்  இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசு பள்ளியில்  மேலாண்மை குழு கூட்டம் நடைபெறுவது வழக்கம் .இந்த நிலையில் நேற்று  2022ஆம் ஆண்டிற்கான பள்ளி மேலாண்மை  கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில்   பள்ளியில் பயின்றும் மாணவ மாணவியர் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் . இதில்  குழந்தைகளின் ஒழுக்கத்தை பற்றியும் பள்ளியின் வளர்ச்சி பற்றியும் பள்ளியில்  இடையில் நின்ற மாணவர்களை  பள்ளியில் சேர்க்க முன்வர வேண்டும் எனவும், பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை பள்ளிக்குச் செல்லும் பொழுது அறிவுரை வழங்க வேண்டும் என்று பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.

இதில் உறுப்பினர்கள் மொத்தம் 20 பேர் இவர்கள் மணிமேகலையை தலைவராகவும் ராஜேஸ்வரி துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுத்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் ஆசிரியர்கள் உட்பட அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மனோகரன், வட்டார  கல்வி அலுவலர் மணிகிருஷ்ணன், முன்னாள் மேலாண்மை குழு தலைவர் ஆசிரியர் ஸ்ரீராமுலு, பஞ்சாயத்து தலைவர் கஸ்தூரி சரவணன், உதவி தலைமை ஆசிரியர் சதாசிவம், ஆசிரியர் சிவகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.