Type Here to Get Search Results !

தர்மபுரியில் மீன் விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர்ஆய்வு.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி. கி.சாந்தி ஐ.ஏ.எஸ் அவர்கள் உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறையுடன், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணைந்து நேற்று தர்மபுரியில் உள்ள நகராட்சி மீன் மார்க்கெட் , சந்தைபேட்டை மற்றும் பென்னாகரம் ரோடு பகுதியில் உள்ள மீன் இறைச்சி மொத்த, சில்லறை விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மரு திருமதி. ஏ.பானுசுஜாதா எம்.பி.பி.எஸ் மற்றும் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர் திரு கோகுலரமணன் அவர்கள் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திரு.கே.நந்தகோபால், திரு.குமணன் உடன் மீன் வளத்துறை சார் ஆய்வாளர்கள் உள்ளிட்ட குழுவினர் இன்று திடீர் ஆய்வு செய்தனர்.

தர்மபுரி நகரில், மீன் இறைச்சி கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த மீன்கள் மற்றும் ஐஸ் பெட்டிகளில் இருந்த மீன்கள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு சோதனை தீவிரமாக ஆய்வு செய்ததில் ஒரு சில கடைகளிலிருந்து தரம் குறைவான தகுதியற்ற கெட்டு போன கட்லா, திலோப்பியா மற்றும் ரூப்சந்த உள்ளிட்ட வகையிலான மீன்கள் சுமார் 70 கிலோ அளவிலானது பறிமுதல் செய்யப்பட்டு, பீனாயில் ஊற்றி அழித்து முறையாக அப்புறப்படுத்தப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்ட கெட்டுப்போன மீன் இறைச்சி மதிப்பு சுமார் ரூ 10000(பத்தாயிரம்) ஆகும்.

மேலும் கெட்டு போன மீன்கள் விற்பனைக்கு வைத்திருந்த நான்கு கடைகளில், சில்லறை விற்பனை கடைகள் மூன்றிற்கு தலா ரூ.1000 வீதம் ரூ.3000 மற்றும் மொத்த விற்பனை கடைக்கு ரூ.2000 என மொத்தம் இன்று உடனடி அபராதம் 5000 விதிக்கப்பட்டதுடன் இனி இதுபோன்ற கெட்டுப்போன மீன்களோ, தரம் குறைவானதோ விற்பனை செய்யக்கூடாது எனவும் மீன்களை நீண்ட நாள் இருப்பு வைப்பதோ கூடாது என எச்சரிக்கப்பட்டது. மேலும் மீன் மார்க்கெட் மற்றும் சந்தைபேட்டை பகுதிகளில் உள்ள கடைகளில் ஐஸ் கலன்கள் சுகாதாரமற்ற வகையில் காணப்பட்டதை எச்சரித்தும் முறையாக பராமரிக்கவும் மீன்கள் அதிக நேரம் வெய்யில் மற்றும் வெளியில் வைக்காமல் உரிய முறையில் பராமரித்து விற்பனை செய்ய மாவட்ட நியமன அலுவலர் உத்தரவிட்டார்.

இது போன்ற ஆய்வுகள் தொடர்ச்சியாக அரூர், பென்னாகரம் ஒகேனக்கல் பகுதிகளிலும் இருதுறையும் இணைந்து மேற்கொள்ளும் என தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies