Type Here to Get Search Results !

44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டிகள் குறித்து "நம்ம செஸ் நம்ம பெருமை" விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்.

தருமபுரி நகராட்சிக்குட்பட்ட தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் சென்னை, மாமல்லபுரத்தில் வருகின்ற 28.07.2022 முதல் 10.08.2022 வரை நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டிகள் குறித்தும், "நம்ம செஸ் நம்ம பெருமை" என்பது குறித்தும் தருமபுரி மாவட்ட மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தருமபுரி மாவட்ட மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தின் கீழ் நெகிழி இல்லா தமிழகம், நெகிழி இல்லா தருமபுரி 44-வது செஸ்ஒலிம்பியாட் இலட்சினை பொறிக்கப்பட்ட மஞ்சப்பைகள் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் தருமபுரி மாவட்ட தமிழர் தற்காப்பு பயிற்சி பள்ளியின் சார்பில் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மல்லர் கம்பம் மற்றும் சிலம்பம் தற்காப்பு கலைநிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது.

சென்னை, மாமல்லபுரத்தில் வருகின்ற 28.07.2022 முதல் 10.08.2022 வரை நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டிகள் குறித்தும், "நம்ம செஸ் நம்ம பெருமை" என்பது குறித்தும் தருமபுரி மாவட்ட மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தருமபுரி மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில் தருமபுரி நகராட்சிக்குட்பட்ட தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் "மீண்டும் மஞ்சப்பை" விழிப்புணர்வு இயக்கத்தின் கீழ் நெகிழி இல்லா தமிழகம், நெகிழி இல்லா தருமபுரி 44-வது செஸ் ஒலிம்பியாட் இலட்சினை பொறிக்கப்பட்ட மஞ்சப்பைகளை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியும், தருமபுரி மாவட்ட தமிழர் தற்காப்பு பயிற்சி பள்ளியின் சார்பில் இப்பயிற்சி பள்ளியின் மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மல்லர் கம்பம் மற்றும் சிலம்பம் தற்காப்பு கலை நிகழ்ச்சிகளும் இன்று (17.07.2022) நடைபெற்றது.

சென்னை, மாமல்லபுரத்தில் வருகின்ற 28.07.2022 முதல் 10.08.2022 வரை 44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் நடைபெறுவது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தருமபுரி மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில் தருமபுரி நகராட்சிக்குட்பட்ட தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்றைய தினம் (17.07.2022) பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து துணிப்பைகளை மீண்டும் பயன்பாடுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீதமாக "மீண்டும் மஞ்சப்பை" விழிப்புணர்வு இயக்கத்தின் கீழ் நெகிழி இல்லா தமிழகம், நெகிழி இல்லா தருமபுரி 44-வது "நம்ம செஸ் நம்ம பெருமை" செஸ் ஒலிம்பியாட் இலட்சினை பொறிக்கப்பட்ட மஞ்சப்பைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சென்னை, மாமல்லபுரத்தில் வருகின்ற 28.07.2022 முதல் 10.08.2022 வரை நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் குறித்தும், "நம்ம செஸ் நம்ம பெருமை" என்பது குறித்து தருமபுரி மாவட்ட மக்கள் அறிந்து கொள்ளும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தருமபுரி மாவட்டம், நல்லாம்பட்டியில் உள்ள தமிழர் தற்காப்பு பயிற்சி பள்ளியின் சார்பில் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மல்லர் கம்பம் மற்றும் சிலம்பம் தற்காப்பு கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திருமதி.தே.சாந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மாகத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ஆர்.விமலன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திரு.ஜெ.முத்துக்குமார், தருமபுரி மாவட்ட தமிழர் தற்காப்பு பயிற்சி பள்ளியின் பயிற்சி ஆசிரியர் திரு.ஜெ.சண்முகம் உட்பட தற்காப்பு பயிற்சி பள்ளி மாணவ, மாணவியர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies