தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூருவில் இருந்து தூத்துக்குடிக்கு அரிசி லோடு ஏற்றி வந்த லாரி சாலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதில் முன்னாள் சென்று கொண்டிருந்த குஜராத்தில் இருந்து ஈரோட்டிற்கு பஞ்சுபேல் ஏற்றி வந்த லாரி மீது மோதியதில் பஞ்சுபேல் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்தது.
பின்னால் மோதிய அரிசி லோடு லாரி சாலையின் நடுவில் இருந்த தடுப்பை கடந்து எதிர் திசை சாலையில் வந்த தூத்துக்குடியில் இருந்து ஹைதராபாத்திற்கு உப்பு லோடு ஏற்றிச்சென்ற மற்றொரு லாரி மீது வேகமாக மோதியது.
இந்த விபத்தினால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த தொப்பூர் காவல்துறையினர் மற்றும் சுங்க சாவடி ஊழியர்கள் விபத்துக்குள்ளான லாரிகளை அப்புறபடுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
இந்த விபத்து குறித்து தொப்பூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
.gif)


