Type Here to Get Search Results !

வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த ஒருவர் கைது.

தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே  ஜருகு அடுத்த  மேற்கித்தியான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 36). இந்த நிலையில் பெருமாள், வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தொப்பூர் போலீசாருக்கு தகவல் வந்தது. 

இதையடுத்து போலீசார், நேற்று பெருமாள் வீட்டுக்கு வந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் 1லு கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பெருமாளை போலீசார் கைது செய்தனர். 

மேலும் அவருடன் வேறு யாரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies