தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி மகன் பெருமாள் (வயது.42) விவசாயம் செய்து வருகிறார், இவர் வீட்டில் 40 ஆயிரம் மதிப்பிலான கறவை மாடு ஒன்றை வளர்த்து வந்தார், நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் இவருடைய மாட்டை திருடி சென்று விட்டனர், இது குறித்து பஞ்சப்பள்ளி போலீசில் புகார் அளித்தார்,
போலீசார் மாடு திருடிய குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் நேற்று காரிமங்கலம் மாட்டு சந்தையில் பெருமாள் என்பவரின் மாடு விற்பனைக்கு சிலர் கொண்டு வந்தது தெரிய வந்தது.
உடனடியாக சென்ற பஞ்சப்பள்ளி போலீசார் மாடு விற்பனைக்கு கொண்டு வந்த 3 பேரையும் கையும் களவுமாக பிடித்து விசாரித்தனர். 3 பேரும் பஞ்சப்பள்ளி அருகே கங்கபாளையம் கிராமத்தை சேர்ந்த திருப்பதி (வயது. 25), ஹரிஸ் (வயது 15), சீனிவாசன் (வயது.17) என விசாரனையில் தெரிய வந்தது, 3 பேரையும் போலீசார் கைது செய்து திருப்பதியை சிறையிலும் மற்ற இருவர்களையும் சேலத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்திற்கும் அனுப்பபட்டனர்.
.gif)

