Type Here to Get Search Results !

கள்ளச்சாராயம் காய்ச்சிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள தொப்பூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஊத்துபள்ளம் என்ற பகுதியில் ஜெயராமன் (வயது47) என்பவர் தனது விவசாய நிலத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில்  இரவு நேரத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக தொப்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து தொப்பூர் போலீசார் சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றபோது சட்ட விரோதமாக கள்ளசாராயம் காய்ச்சிய ஜெயராமனை கைது செய்தனர். 

மேலும் கள்ளசாராயம் காய்ச் சுவதற்காக வைத்திருந்த 25 லிட்டர் ஊறல் மற்றும் 2 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies