Type Here to Get Search Results !

மாரண்டஹள்ளி அரசு மருத்துவமனையில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியை மேற்கொண்ட பாஜகவினர்.


தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அரசு மருத்துவமனையில் பாஜக மேற்கு ஒன்றிய தலைவர் கருணாகரன் தலைமையில் அரசு மருத்துவமனை முழுவதும் தூய்மை செய்யும் பணியை மேற்கொண்டனர். மாரண்டஅள்ளி அரசு மருத்துவமணை தூய்மையாக இல்லாததால் தொற்று நோய்களுக்கு ஆட்படுகின்றனர். மேலும் பொது இடங்களில் புகை பிடித்தல், குப்பைகளை கண்ட இடங்களில் போடுதல், கண்ட இடங்களில் எச்சில் துப்புதல், பொது வெளியில் கழிப்பறை செல்லுதல் போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதால் நம்மைச் சுற்றியுள்ள பகுதி அசுத்தமாக அமைந்து அதனால் நோய் கிருமிகள் உருவாகி பொதுமக்களை பாதிக்கிறது. 

இதை தவிர்க்கும் பொருட்டு தேச தந்தை மகாத்மா காந்தியின் திட்டமான “தூய்மை இந்தியா” என்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு “தூய்மை பாரதம்” என்ற பொது இடங்களை தூய்மை செய்யும் செயல் திட்டத்தை பாரதப் பிரதமர் நரேந்திரமோடி நாடு முழுவதும் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அரசு அலுவலகங்களிலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும், வீடுகளிலும், தெருக்களிலும், பொது இடங்களிலும் அனைத்து பொதுமக்களும் தாமாக முன்வந்து தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் இதையடுத்து மாரண்டஅள்ளி அரசு மருத்துவமனையில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் இணைந்து தூய்மைப் பணியை மேற்கொண்டனர். 

தினந்தோறும் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் மாரண்டஅள்ளி பேரூராட்சி பணியாளர்களுக்கு அவர்களை கௌரவிக்கும் வகையில் சால்வை அணிவித்தும் இனிப்புகள் வழங்கினர். 

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பொதுச் செயலாளர்கள்  முருகன், பெரியசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவி மற்றும்  பாஜக கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies