Type Here to Get Search Results !

ஹிந்தி திணிப்பு மற்றும் நுழைவு தேர்வு போன்றவற்றை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.

ஹிந்தி மொழி திணிப்பு முயற்சியைக் கைவிட மற்றும் மத்திய அரசின் பல்கலைக் கழங்களில் நுழைவுத் தேர்வு நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை  மத்திய அரசு பல்கலைக்கழகங் களில் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பென்னாகரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பென்னாகரம் பகுதி செயலாளர் ரவி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.சிசுபாலன், பென்னாகரம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் சக்திவேல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் அன்பு, ஜீவானந்தம், பெற்றது. குமார், ராஜி, செல்லன் ஆகி யோர் கண்டன உரையாற்றினர்.

பென்னாகரம், ஏரியூர் ஒன்றியச் செயலாளர் எம்.பி. முருகேசன், நகரச் செயலாளர் எழிலரசன், பாப்பாரப் பட்டி பகுதி செயலாளர் சின்ன சாமி, மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் கே.ஜி.கருவூரான், பால் உற்பத்தியாளர் சங்ச மாவட்ட துணை செயலாளர் பி.எம். கதிர் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies