Type Here to Get Search Results !

உயிரிழந்த விவசாயி திரு.சி.கணேசன் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதி ரூ.5.00 இலட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம் பாலவாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், கரியப்பன அள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் என்பவர் உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்த செய்தியைக் கேட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் மிகவும் வேதனையுற்று உயிரிழந்த விவசாயி கணேசன் அவர்களது குடும்பத்தாருக்கு, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட ஆணையிட்டு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசு என்றென்றும் விவசாயிகளுக்கு உற்றதோழனாக இருக்கும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று (17.04.2022) தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பள்ளிப்பட்டி, கரியப்பன அள்ளி கிராமத்தில் உள்ள உயிரிழந்த விவசாயி திரு.சி.கணேசன் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மாரியதை செலுத்தி, விவசாயி திரு.சி.கணேசன் அவர்களை இழந்து வாடும் அவரது மனைவி திருமதி.க.மாதம்மாள், மகள் திருமதி.க.கீர்த்தனா, மகன்கள் செல்வன்.க.சக்திவேல், செல்வன்.க.தீபக் மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்கள்.

அதனை தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வரப்பெற்ற ரூ.5.00 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப அவர்கள், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.கோ.க. மணி அவர்கள் ஆகியோர் முன்னிலையில் மறைந்த விவசாயி திரு.சி.கணேசன் அவர்களின் மனைவி திருமதி.க.மாதம்மாள் மற்றும் அவரது குழந்தைகளிடம் நேரில் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.பி.என்.பி.இன்பசேகரன், திரு.தடங்கம்.பி.சுப்பிரமணி, பென்னாகரம் வருவாய் வட்டாட்சியர் திரு.அசோக்குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திரு.செல்வராஜ் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies