தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் நிலைய சரகத்தில் பைபாஸ் ரோடு பகுதியில் அடிக்கடி குற்ற சம்பவங்களும், விபத்துக்களும் நடைபெறுவதை தடுக்கவும், குற்றவாளிகளை கண்டறியவும் பைபாஸ் ரோடு ழுழு வதும் கண்காணிக்கும் வகையில் 2 கேமராக்களை அமைத்து தரும்படி பாலக்கோடு காவல் ஆய்வாளரின் வேண்டுகோளை ஏற்று ஸ்ரீரங்கா டிபார்ட்மெண்ட் உரிமையாளர் ராம்குமார் அவர்கள் 2 கேமராக்களை அமைத்து தந்தமைக்கு காவல்துறை சார்பாக காவல் ஆய்வாளர் தவமணி அவர்கள் நன்றி தெரிவித்தார்.
மேலும் வணிக நிறுவனங்கள் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அவரவர் கடைகளின் முன்பு கேமராக்களை அமைத்து காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.