Type Here to Get Search Results !

அதியமான் கோட்டம், தியாகி சுப்ரமணிய சிவா நினைவலையங்களை மேம்படுத்த ஆய்வு.

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சியில் உள்ள வள்ளல் அதியமான் கோட்டம் மற்றும் பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி. ஒன்னப்ப கவுண்டனஅள்ளி ஊராட்சியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம் ஆகியவற்றை இயக்குநர் செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசு துணைச்செயலாளர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இஆப., அவர்கள் இன்று (28.03.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இந்த
ஆய்வின் போது தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன் அவர்கள் உடனிருந்தார்.

நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சியில் உள்ள வள்ளல் அதியமான் கோட்டத்தில் இயக்குநர் செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசு துணைச்செயலாளர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இஆப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, வள்ளல் அதியமான் கோட்ட அரங்கத்திற்குள் வள்ளல் அதியமான் அவர்களின் வாழ்க்கை வரலாற்று குறிப்புகளுடன் கூடிய வாழ்க்கை வரலாற்று ஓவியங்களை காட்சிப்படுத்துதல் மற்றும் ஒளி-ஒலி காட்சி அமைத்தல், இவ்வளாகத்தில் இயற்கை எழில் கொஞ்சும் புதிய பூங்காக்களை உருவாக்குதல் மற்றும் வள்ளல் அதியமான் கோட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய சிறப்பு பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஏதுவாக முன்மொழிவுகளை உடன் தயாரித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் ஒப்புதல் பெற்று இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென உத்தரவிட்டார்கள்.

இதனை தொடர்ந்து, பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி. ஒன்னப்ப கவுண்டனஅள்ளி ஊராட்சியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபத்தில் இயக்குநர் செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசு
துணைச்செயலாளர் முனைவர்.வி.ப.ஜெயசீலன் இஆப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு இம்மணிமண்டபத்தில் தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் மார்பளவு சிலை அமைப்பதற்கும், இம்மணிமண்டப வளாகத்தில் பூங்கா அமைத்தல் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் உரிய முன்மொழிவுகளை தனித்தனியாக தயாரித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் ஒப்புதல் பெற்று இயக்குநர். செய்தி மக்கள் தொடர்புத்துறைக்கு அனுப்பி வைத்திட வேண்டுமென உத்தரவிட்டார்கள்.

இந்த ஆய்வின் போது செய்தி திரு.மு.அண்ணாதுரை, பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர்கள் கலந்துகொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies