தருமபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று 2020-21 ஆம் கல்வி ஆண்டில் நீட் தேர்வில் தகுதி பெற்று, 7.5% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் செல்வி. மு.சரண்யா செல்வன் சா.முனிரத்தினம், செல்வி.பா. அஞ்சும், செல்வன். கு. பெரியசாமி, செல்வி. மு.யுவசங்கரி, செல்வி.கா.பிரேமதர்ஷினி, செல்வி.பொ.மோனிஷா, செல்வி.மா.சந்தியா, செல்வி.மா.நதியா, செல்வி.தொ.ஹரியரசி, செல்வி. அ.சவிதா, செல்வன்.சி.பிரவீண்குமார், செல்வன்.சி.ஜெகதீஷ், செல்வன் நா.மாதுமணி, செல்வன்.ஜெ.இரத்தினவேல், செல்வி.கொ.சந்தியா, செல்வன்.சி.சந்தானம், சல்வன்.ச.குமார், செ ன். இரா.சிவா, செல்வி.கு .சண்முகபிரியா, செல்வி. இ.தமிழரசி, செல்வன். எம். சிலம்பரசன், செல்வி.சி.பவித்ரா, செல்வி. சே. ரேவதி, செல்வி.செ.ஸ்ரீமதி, செல்வன். கி.இராகுல் கண்ணா ஆகிய 26 மாணவ, மாணவியர்கள் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மருத்துவப்படிப்பிலும் மற்றும் செல்வன்.தி.தமிழ்செல்வன், செல்வி.சு.யுவஸ்ரீ, செல்வி. சு.விஷ்ணுபிரியா, செல்வி.த இலாவண்யா, செல்வன் அ.ஹரீஷ், செல்வன். இரா.பிரபு, செல்வி. ச.இலக்கியா, செல்வி.டி.ரமணி ஆகிய மாணவியர்கள் பல்வேறு பல் மருத்துவக்கல்லூரிகளில் பி.டி.எஸ் மருத்துவப்படிப்பிலும் என் நீட் தேர்வில் தகுதி பெற்று, 7.5% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த மொத்தம் 34 மாணவியர்கள் பல்வேறு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவப்படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.
8 மாணவ, மாணவ, இம்மருத்துவ மாணவ, மாணவியர்களுக்கு தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் உள்ள ஆதவா தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் தலா ரூ.25,000 வீதம் 34 மருத்துவ மாணவ, மாணவியர்களுக்கு ரூ.8,50,000 கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச. திவ்யதர்சினி இஆப., அவர்கள் இன்று வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் திரு.து.கணேஷ்மூர்த்தி, ஆதவா தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவர் திரு.ஜெ.பாலகுமரேசன், மாவட்ட கல்வி அலுவலர் (பாலக்கோடு ) திரு.இரா.பாலசுப்பிரமணி, மாவட்ட கல்வி அலுவலர் (தருமபுரி) திரு.டி.சண்முகவேல், மாவட்ட கல்வி அலுவலர் (அரூர்) திரு.ஏ இரவிக்குமார் உட்பட தொடர்புடைய கல்வித்துறை அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.