அரசு மேல்நிலைப் பள்ளி வே.முத்தம்பட்டி பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியை பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.திருமுகம் தொடக்கி வைத்தார். நடப்புக் கல்வி ஆண்டில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த திட்டம் ஆன்லைன் வழியில் மாற்றப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி வே.முத்தம்பட்டி பள்ளியின் ஆசிரியர்கள் திரு.சந்திரசேகரன் மற்றும் திரு.சுரேஷ் ஆகியோர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி S.கொட்டாவூர் பள்ளிக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி S.கொட்டாவூர் பள்ளி ஆசிரியர்கள் திரு.தங்கதுரை மற்றும் திரு.சுரேஷ் ஆகியோர் அரசு மேல்நிலைப் பள்ளி வே.முத்தம்பட்டி பள்ளிக்கும் சென்று தங்கள் பள்ளியிலுள்ள பல்வேறு வளங்கள் மற்றும் வசதிகள் குறித்து 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு காணொலி வாயிலாக விளக்கினர்.
மேலும் நமது நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களை காணொலி பயணமாக (VIRTUAL TOUR) மாணவர்கள் கண்டு ரசித்தனர்.இறுதி நிகழ்வாக முத்தம்பட்டி மற்றும் கொட்டாவூர் பள்ளி மாணவர்கள் ZOOM MEET மூலம் இணைய வழியில் கலந்துரையாடினர்.