தருமபுரி மாவட்டம் மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மதலைமுத்து, தருமபுரி ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ராமன் நகர் பகுதியில் வசித்து வருகிறார். இன்று காலை 8.30 மணிக்கு லஞ்ச ஒழிப்புத் அதிகாரிகள் இவரது குழுவாக சோதனை மேற்கொண்டனர்.
இச்சோதனை தற்போது வரை தொடர்ந்து நீடித்து வருகிறது. இச்சோதனைக்கான காரணம், ஆவணங்கள் மற்றும் பணம் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளதா என சோதனையின் நிறைவில் முறையாக இலஞ்ச ஒழிப்புத்துறை மூலம் தெரியவரும்.
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட திட்ட இயக்குநரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வரும் ஆனந்தன். இவர் அரூரில் வசித்து வருகிறார், ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன். பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அ.பள்ளிப்பட்டியில் வசித்து வருகிறார். இவர்களின் வீடுகளிலும் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
.gif)
