கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண்தேஜாஸ்ரீ யிடம் புகார் மனு அளித்தனர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், சமீபகாலமாக தங்களது பகுதியில் நிலமதிப்பு அதிகரித்து வருவதால். ஏழை எளிய மற்றும் விவரம் தெரியாத நில உரிமையாளர்களின் நிலங்களை ஏமாற்றி பிடிங்க திட்டம் தீட்டிய சமூக விரோதிகள்.
அர்கள்கை கூலியான அதே கிராமத்தை சேர்ந்த புட்டப்பா என்பரின் மகன் நாராயணன். என்ற நில தரகரை பயன்படுத்தி சுமார் 30-க்கும் மேற்பட்டவர்களின் நிலத்தை வாங்குவதாக கூறி அவர்கள் நிலத்தை கையகபடுத்தி உள்ளனர்.. உதாரணத்திற்க்கு எல்லப்பா. சுதாகர். ஆனந் ராஜா. சின்னதோப்பா. கிருண்ணன். எல்லப்பா ஆகியேரரை ஏமாற்றி அவர்கள் நிலத்த்தை கையகபடுத்தி சுமார் 4 -கோடி ரூபாய் அளவிற்க்குஏமாற்றி உள்ளனர்.
இதே போல் 30-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றியும். அரசு நிலங்களை அபகரித்தும் சுமார் 24-கோடிரூபாய் அளவில் மோசடி செய்துள்ளதாகவும், இது குறித்துமத்திகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததில் எந்தவித நடவடிக்கையும் இல்லாததால்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு அளித்ததாகவும், மோசடியில் ஈடுபட்ட நாராயணனால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனவே தகுந்த நடவடிக்கை கோரி புகார் அளிப்பதாக தெரிவித்தனர்.