தர்மபுரி மாவட்டம், அரூர் - சேலம் சாலையில் அரூரில் இருந்து 7-வது கிலோ மீட்டரில் அமைந்துள்ள புளூதியூர் கிராமத்தைச் சேர்ந்த குமுதா (55) இவரது கணவர் இறந்துவிட்டார். இவருக்கு ஒரு ஆண், ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி வெளியூரில் குடியிருந்து அங்கு வசித்து வருகின்றனர். குமுதா வீட்டின் அருகே பெட்டிகடையும், சாலையோரத்தில் ஓட்டு வீட்டில் கதவு இல்லாமல் தார்ப்பாய் மூடி தனியாக வசித்து வருகிறார்.
நேற்று இரவு கடையை மூடிவிட்டு கட்டிலில் தூங்கியுள்ளார் இரவு சுமார் 11- மணியளவில் வீட்டினுள் நுழைந்த மர்ம நபர்கள் அருகே இருந்த கருங்கல்லை எடுத்து குமுதாவின் முகத்தில் வைத்து அழுத்தியுள்ளனர். மூச்சு திணறல் ஏற்பட்டு குமுதா கத்திய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதை பார்த்த மர்ம நபர்கள் தப்பி ஓடினர்.
இது குறித்து கோபிநாதம்பட்டி போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்த குமுதாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரூர் அரசு ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர். குமுதா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.