தருமபுரிமாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தை ஏலம் விடுவதை தடுத்து நிறுத்திய பஞ்சாயத்து தலைவியின் கணவர்.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி சுற்றியுள்ள பகுதிகளில் சாலை ஓரங்களில் இருக்கும் புளிய மரங்கள் ஏலம் விடும் பணி நடைபெற்று வருகிறது, நல்லம்பள்ளி ஊராட்சியில் புளிய மரம் ஏலம் விடும் நிகழ்ச்சி நடந்தது, இந்த நிகழ்ச்சியில் நல்லம்பள்ளி பஞ்சாயத்து தலைவி புவனேஸ்வரியின் கணவர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இந்த இந்த ஏலத்தில் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் ஆதரவாளர்கள் யாரும் ஏலம் கேட்காத நிலையில் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இருவரும் இந்த ஏலத்தில் அமர்ந்தனர், இதில் ஆத்திரமடைந்த பஞ்சாயத்து தலைவியின் கணவர் வெளியூரை சேர்ந்த நீங்கள் எடுக்கக்கூடாது என கூறிவிட்டு ஏலத்தை நடத்தாமல் நிறுத்தி விட்டு வெளியேறினார், இதனால் அறிவிப்பின்றி ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.