Type Here to Get Search Results !

உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது.

1988ம் ஆண்டு முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட நோய் எய்ட்ஸ், எச்ஐவி எனும் வைரஸ் தாக்கியதால் ஏற்படும் நோயையே எய்ட்ஸ் என அழைக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1ம் தேதி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருப்பதும், எய்ட்ஸ் வராமல் தடுப்பது மற்றும் அதற்கான கட்டுப்பாடுகளை மேற்கொள்வது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அசோக் லேலண்ட் , ஆரோக்கிய ஹெல்த் சென்டர் மற்றும் ஞான தீபம் சேவை மையம் சார்பில் உலக எய்ட்ஸ் தினம் கடைப்பிடிக்கப்பட்டது, ஓசூரில் புதிய பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் , தன்னார்வலர்களும் பொதுமக்களுக்கும் உலக எய்ட்ஸ் தின பேரணியில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் ஓசூர் வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழி, வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி, அசோக் லேலண்ட்  சிஎஸ்ஆர் வெங்கடசுப்ரமணியன், மேலும் ஆரோக்கிய ஹெல்த் சென்டர் ஜகன்நாதன், ஓசூர் துணை மருத்துவக்கல்வி நிறுவன மேலாளர் ஜெனிபா மதியழகன், சாந்தி கல்லூரி சீதா,ஆடிட்டர் சிந்தியா மற்றும் ஞானதீபம் சேவை மைய தலைவர் கீதா கடலரசு பரணி உள்ளிட்டோர் பேரணியில் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies