தர்மபுரி மாவட்ட பகுதிகளில் மது பாட்டில்கள் வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவது தொடர்கதையாக இருந்து வருகின்ற நிலையில் தற்போது பலபகுதிகளில் கஞ்சா விற்பனையும் அதிகரித்து வருகின்றது. தீவிர சோதனையில் போலீசார் ஈடுபட்டு பலரை கைது செய்து வருகின்றனர்.
அரூர் காவல் உட் கோட்டத்தில் உள்ள கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, கோபிநாதம்பட்டி, கம்பைநல்லூர், கோட்டப்பட்டி, அரூர் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் மது பாட்டில்கள் வாங்கிச் சென்று கிராமபகுதிகளில் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் அரசு மதுபானகடைகளை தைப்பொங்கல், மகாவீர் ஜெயந்தி, மிலாடி நபி, குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட பல நாட்களுக்கு மதுக்கடைகளை மூடி உத்தரவிட்டு உள்ளது.
ஆனால் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ஏராளமானோர் மதுக்கடைகளில் மது பாட்டில்களை கூடுதல் விலை கொடுத்து வாங்கி சென்று பதுக்கி வைத்து இரண்டு மடங்கு விலை உயர்த்தி விற்பனை செய்து வருவது இந்தபகுதிகளில் தொடர்ந்து தொடர்கதையாக இருந்து வருகிறது. இது போன்ற பதுக்கள் மதுகடைகள் கிராம பகுதிகளில் தற்போது அதிகரித்து வருகின்ற சூழ்நிலை அதிகரித்து வருகின்றது.
இந்த சுழ்நிலையில் தற்போது கஞ்சா விற்பனையும் அதிகரித்து வருகின்றது போலீசாருக்கு புது தலைவலியாக உருவாகி வரும் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் வாகன சோதனைகள் நடத்தி வருகின்றனர்.
- செய்தியாளர் எஸ் நந்தகுமார்.