கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விஜயதசமி கொண்டாடப்பட்டது. புரட்டாசி மாதம் 28ம் தேதி (அக்டோபர் 14) நவமி திதியில் துர்க்கை அன்னை போருக்காக தன் ஆயுதங்களை பூஜித்த ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சரஸ்வதி பூஜை என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது.
நம் வாழ்வாதாரத்திற்காக நாம் பயன்படுத்தக்கூடிய தொழில் செய்வதற்கான பொருட்களை, உபகரணங்களைப் பூஜிப்பது வழக்கம் இதற்கு தசரா பண்டிகை என்றும் அழைக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சரஸ்வதி பூஜை நடைப்பெற்றது .இந்த நிகழ்ச்சியில் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகள் சிவக்குமார், சுப்பிரமணி அவர்களின் தலைமையில் பூஜை நடைப்பெற்றது. விழா நிறைவில் அதிகாரிகளும் பொதுமக்களுக்கும் ஊழியர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது