குருபரப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கி.கோவிந்தன் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் அறிஞர் அண்ணா ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் என சங்க கவுரவத் தலைவர் கேபிள் மணி, போடரப்பள்ளி துரைசாமி. ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு இந்த ஆயுத பூஜையை சிறப்பாக நடத்த வழி வகுத்தனர்.
இந்த ஆயுத பூஜையின்போது குருபரப்பள்ளி காவல் துறையினர் கலந்துகொண்டு ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சாலை விதிமுறைகளை தெளிவுபடுத்தி விரிவாக ஓட்டுநர்களுக்கு புரியும் விதமாக அறிவுரை வழங்கினார்கள்.
அனைத்து ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி அனைத்து ஆட்டோக்களிலும் மாலை அணிவித்து பூஜைகள் நடைபெற்றது, கர்ப்பிணி தாய்மார்களுக்கு இலவசமாக ஆட்டோ ஓட்டிய ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கௌரவ படுத்தினார்கள், இறுதியில் குருபரப்பள்ளி அறிஞர் அண்ணா ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சங்க பொருளாளர் V.சேட்டு நன்றியுரை கூறினார்.